ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச். இறுதிப்போட்டியில் சிட்சி பாஸை 6-3, 7-6, 7-6  என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் நோவக் ஜோகோவிச்.
அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் 22 பட்டங்களுடன் நடாலுடன் இணைந்தார் ஜோகோவிச்.
கடந்த முறை கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் ஆஸ்திரேலிய ஓப்பனில் ஜோகோவிச் பங்கேற்கவில்லை
ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் மீண்டும் உலகின் முதல் நிலை வீரர் ஆனார் ஜோகோவிச்.