
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்த கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில் ஆவணி மாதம் முதல் பௌர்ணமியான இன்று மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் என்று கிரிவலம் செல்வார்கள்.
இதனை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்கான நல்ல நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று 19ஆம் தேதி அதிகாலை 2:58 மணிக்கு தொடங்கி மறுநாள் 20-ம் தேதி அதிகாலை 1.02 மணி வரை நல்ல நேரம் இருக்கிறது. மேலும் இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.