சென்னை எழும்பூரில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி நெல்லை விரைவு ரயில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பணத்தை எடுத்துச் சென்ற பாஜக பிரமுகர் சதீஷ் உட்பட மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், தேர்தல் செலவுகளுக்காக பணத்தை எடுத்துச் சென்றதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.