கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகளுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்..

கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்து விளையாட்டில் கலந்து கொண்ட பின்னர் இன்று 15.02.2023 காலை கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, சோபியா த/பெ வெள்ளைச்சாமி (7ம் வகுப்பு), தமிழரசி த/பெ. ராஜ்குமார் (8ம் வகுப்பு), இனியா த/பெ. மோகன் குமார் (6ம் வகுப்பு) மற்றும் லாவண்யா த/பெ. பெரியண்ணன் (6ம் வகுப்பு) ஆகிய நான்கு மாணவிகள் எதிர்பாராத விதமாக சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்திகளை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தல 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.