தமிழகத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் 46,138 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 12, 201, தனியார் பள்ளிகள் 2,109, கல்லூரிகள் 54,439 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 1,23,600 இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் ஒரு வார காலத்திற்கு வழங்கப்படுகிறது.

இந்த மாத்திரைகளை வழங்குவதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 19 வயது வரை உள்ள 2.15 கோடி பயனாளிகளும், 20 – 30 வரை உள்ள 54.67 லட்சம் பெண்களும் பயனடைகின்றனர். தமிழகத்தில் ஒரு வாரத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 600 இடங்களில் மொத்தம் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.