மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் ரயில்வேயில் மண்டல வாரியாக காலியாக உள்ள ஓட்டுனர், உதவி ஓட்டுநர் பணியிட எண்ணிக்கையை வழங்குமாறு RTI சட்டத்தில் மனு போட்டதில், 70,093 ஓட்டுநர் மற்றும் 57,551 உதவி ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிந்தது.

இதனால் கூடுதல் பணி நேரம் ரயிலை ஓட்ட வேண்டியிருப்பதாகவும், கடுமையான மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் ரயில்வே யூனியன் சங்கங்கள் தெரிவித்தன. 9 மணி நேரம் பணி புரிய வேண்டிய ஓட்டுனர்கள் 12 மணி நேரத்தை தாண்டி பணியாற்றுகின்றனர்.