
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் நிலையில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக திமுக அரசை சாடியுள்ளார். இந்நிலையில் சென்னையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஆளுநரை மனு கொடுத்துள்ளார்.
அதன் பிறகு பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் தன் மனுவில் வலியுறுத்தியுள்ளார். பெஞ்சல் புயல் நிவாரண நிதி கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுவதால் உடனடியாக அந்த நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆளுநரை சந்தித்த பிறகு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டார். இதோ அந்த அறிக்கை,
