மணிப்பூர் தலைநகர் நேபாளில் உள்ள ஆளுநர் மாளிகையை மழை நீர் சூழ்ந்தது.

அசாமில் ரெமல் புயல் பாதிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 11  மாவட்டங்களைச் சேர்ந்த 78 ஆயிரம் குழந்தைகள் உட்பட 3 1/2 லட்சம் பேர் பாதிப்படைந்தனர். இந்நிலையில் மணிப்பூர் தலைநகர் நேபாளில் உள்ள ஆளுநர் மாளிகையை வெள்ளநீர் சூழ்ந்தது.

மேலும் இம்பால் பள்ளத்தாக்கில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்தது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் இருந்து விரைவில் தண்ணீர் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.