தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடத்தை கண்டு பயப்படுகிறார் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும் தான் உள்ளதால் ஆளுநர் அஞ்சுவதாக கூறிய அவர், திராவிட மாடல் காலாவதியான கொள்கை அல்ல, சனாதனத்தை காலாவதியாக்கியது என்றும் திராவிடம் எதையும் சிதைக்காது, பிரிக்காது, யாரையும் தாழ்த்தாது.

ஆளுநரை வைத்து எங்களை அச்சுறுத்த நினைத்தால், அஞ்ச மாட்டோம் என கூறிய அவர், அரசின் அங்கமாக இருக்க வேண்டிய ஆளுநர் எதற்காக எதிர்கட்சி தலைவர் போல செயல்பட வேண்டும்? எதையாவது பேசி அமைதி சூழலை சீர்குலைக்க பார்க்கிறாரா? எந்த நோக்கத்திற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.