மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் இரண்டு வருட சாதனை மலர் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 25 இடங்களில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக  அறிவித்துள்ளார்.

கட்டுமான பணிக்கு மணல் தட்டுப்பாடு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்ததால், மணல் குவாரி அமைக்க அனுமதிக்கப் பட்டுள்ளதாக கூறிய அவர், உள்கட்டமைப்பை மேம்படுத்த மணல் அவசியம் என்பதால், தேவைக்கேற்ப பொதுப்பணித்துறை மூலம் குவாரி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.