தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 வருடங்கள் ஆகும் நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கியமான 30 திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அந்த திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி அரசு பள்ளியில் படித்து உயர்நிலைக் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். அதன் பிறகு பட்ஜெட்டில் உயர் கல்வித்துறைக்கு 5,568 கோடியும், பள்ளிக்கல்வித்துறைக்கு 36,785 கோடியும், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 200 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறைக்கு 17,901 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருளர் மக்களுக்கு மொத்தமாக 1440 வீடுகள் கட்டிக் கொடுக்க 70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளத்தை தடுக்கும் பணிகளுக்கு 500 கோடி, சுற்றுச்சூழல் துறைக்கு 849 கோடி, கால்நடை துறைக்கு 1315 கோடி, வட்டி இல்லா பயிர் கடன் வழங்க 200 கோடி, பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களை பாதுகாக்க 12 கோடி, மகளிர் இலவச பேருந்து பயணத்திற்காக 1520 கோடி மானியம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம், அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.