
ஊடக வெளிச்சம் பெறுவதற்காகவே மாநில அரசின் மீது ஆளுநர் திரு ஆர் என் ரவி விமர்சனம் செய்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் நாகை சென்ற ஆளுநர் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்து தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாடியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் எஸ் ரகுபதி, ஆளுநருக்கு மீடியா நோய் தாக்கியுள்ளது என சாடி உள்ளார்.
தினம்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் என்பதற்காக ஆளுநர் செயல்படுவதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். தென் மாநிலங்களில் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக ஊடகங்களில் வருகிறது என்ற மறைமுகமான போட்டி இருப்பது போல் தெரிவதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.