ஒடிசா மாநிலத்தில் உள்ள காசிப்பூர் பகுதியில் ஒரு 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த சனிக்கிழமை அந்த கிராமத்தில் நடந்த ஒரு தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்ப்பதற்காக தன் தோழிகளுடன் சென்றார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இரவு சிறுமிகள் வீட்டிற்கு கிளம்பிய போது அந்த 14 வயது சிறுமி மட்டும் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். அப்போது அவரை 4 வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் ஆளில்லா நேரம் பார்த்து  அந்த சிறுமியை கடத்தி ஒரு மலைப்பகுதிக்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அந்த கும்பலிடம் இருந்து எப்படியோ தப்பித்த சிறுமி தன் பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.