
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் இரு குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சூர்யா, ஜெய் பீம் படத்தில் நடித்த போது அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று அவருடைய அடுத்த படத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சென்னையில் உள்ள அவருடைய வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சூர்யா மும்பையில் செட்டில் ஆகிவிட்ட நிலையிலும் அவருடைய சென்னை வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தினமும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு கொடுக்கும் நிலையில் அவர் அதற்காக எந்த பணமும் செலுத்தவில்லை என RTI மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் ஆளே இல்லாத வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு மட்டும் எதற்கு என நெட்டிசன்கள் விலாசி வருகிறார்கள்.