தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் (சிம்பு) முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘அரசன்’ படத்தில் தனுஷ், அனிருத், நெல்சன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் இணைந்து பணியாற்றுகின்றனர். இதன்மூலம், வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியின் பிரபலமான ‘வடசென்னை’ திரைப்படத்தின் உலகத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவதாக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ப்ரோமோவில், மூன்று கொலைகளில் சிக்கி நீதிமன்றத்தில் ஆஜராகும் சிம்பு தனது கதையை நெல்சனிடம் கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் தனுஷ் கதாபாத்திரத்தை நினைவூட்டும் ஒரு ரெஃபரென்ஸும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள பின்புல இசையும், அனிருத்தின் தீவிர இசைக் காட்சிகளும் ப்ரோமோவுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. படத்தின் தலைப்பை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்ததிலிருந்து, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ப்ரோமோ வெளியானதையடுத்து, “அரசன்” திரைப்படம் திரையரங்குகளில் கொண்டாட்டம் ஏற்படுத்தும் என ரசிகர்கள் உற்சாகமாகக் கூறி வருகின்றனர். மேலும் நேற்று திரையரங்குகளில் புரோமோ வீடியோ வெளியான நிலையில் தற்போது youtube இல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
