ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  ஒரு வினோதமான திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு அமர்ந்து, இளைஞர் ஒருவர் மிகவும் நிதானமாக சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சமோசா சாப்பிட்டு முடித்த அவர், கைகளைக் கூட துடைக்காமல், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை லாவகமாகத் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

“>

இந்த முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி  கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. அந்த இளைஞர் எவ்விதப் பதற்றமும் இன்றி சமோசா சாப்பிடுவதும், பிறகு பைக்கை எடுத்துச் செல்வதும் போலீசாரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த ‘சமோசா திருடனை’  போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.