இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. பொதுவாகவே உலகில் மிகவும் வேகமாக ஓடக்கூடிய உயிரினங்களின் பட்டியலில் சிறுத்தை முதலிடத்தில் உள்ளது.

காட்டு விலங்குகள் மீது மனிதர்களுக்கு எந்த அளவு பயம் உள்ளதோ அந்த அளவுக்கு அவற்றை பார்த்து ரசிப்பதில் அலாதி இன்பமும் இருக்கத்தான் செய்கிறது. காட்டு விலங்குகள் குறித்த வீடியோக்கள் தினம்தோறும் வைரலாகி வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் சிறுத்தை ஒன்று ஆற்றில் குதித்து அசால்டாக பெரிய முதலையை வேட்டையாடுகிறது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.