இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக வலம் வருபவர் தோனி. இவர் இப்போது IPL தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அதன்படி CSK அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தோனி RCB அணிக்கு கேப்டனாக இருந்தால் எப்படி இருக்கும். அதேபோன்று மணிரத்னம் அந்த டீமிற்கு கிரிக்கெட் கோச்-ஆக இருந்தால் எப்படி இருக்கும்?.

இந்த கதைக்களத்தில் ஒரு படம் வருகிறது. திட்டம் 2 படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ், கௌரி கிஷான் நடிக்கும் டைம் ட்ராவலர் படத்தில்தான் இப்படியெல்லாம் வித்தியாசமான உலகம் வரப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது.