சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு சம்போ செந்தில் ஆதரவாளரான மொட்டை கிருஷ்ணனுக்கு இந்த வழக்கில் தற்போது காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது.

இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது மொட்டை கிருஷ்ணனிடம் செல்போனில் பேசியதாக வந்த தகவலின் பேரில் மோனிஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது‌‌. அவரிடம் விசாரணை நடத்தி 10 நாட்களுக்கு மேல் ஆகிறது‌ . மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கு மோனிஷாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ‌