
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவத்தின் துல்லியமான நடவடிக்கையால் 25 நிமிடங்களில் 21 முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தாக்கிய பயங்கரவாத முகாம்களில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக பங்கேற்றுள்ளது. இது பாகிஸ்தானின் இரட்டை வேடம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அவர்களது நிலைப்பாட்டைக் காண்பிக்கும் முக்கியமான சாட்சியமாகவும் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள முரிட்கே பகுதியில், லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு துக்கம் தெரிவித்து கைகளைக் கட்டிக்கொண்டு தலை குனிந்தனர். இந்த நிகழ்வில், லஷ்கர் அமைப்பின் தளபதி அப்துல் ரவூப் நேரில் பங்கேற்றதும் அம்பலமானது.