பாகிஸ்தானில் இருந்து வெளியாகியிருக்கும் ஒரு வீடியோ, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் செய்தி தொகுப்பாளினி, இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” விமானத் தாக்குதலுக்கு பின்னர் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைத்து நேரடி ஒளிபரப்பில் கதறி அழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் உயிர் இழப்புகள் குறித்து பேசும் போது, அவர் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விடுகிறார். அந்த பெண், நேரலை ஒளிபரப்பின் போது, “இவர்கள் அனைவரும் மனிதர்கள் தான்… அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.

அல்லாஹ் அவர்களின் ஆன்மாக்களுக்கு சமாதானம் தரட்டும்” எனக் கூறி குரலை அடக்க முயற்சி செய்தும், அழுதுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் பல்வேறு தரப்பினரின் கவனத்தை பெற்றுள்ளது.

சிலர் அந்தப் பெண்ணின் உணர்வுகளை புரிந்துகொள்கிறார்கள் என்றால், சிலர் இது உண்மைதான் என்று உறுதி செய்ய முடியாது என கூறுகின்றனர். இருப்பினும், அந்த பெண் உண்மையில் பாகிஸ்தானிய செய்தி சேனலின் நிருபரா அல்லது நடிகையா என்பது குறித்து எந்த உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லை.