
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிகளையும் இந்தியா நிறுத்தியதோடு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் வலியுறுத்திய நிலையில் நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் இடங்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. அதன்படி லஸ்கர் இ தொய்பா அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபாபாரத், ஜெய்ஸ் இ முகமது அமைப்பு செயல்படும் பஹவல்பூர், ஹிஸ்புல் முகாஜிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லி, சிகல் கோட் ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டதோடு அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என்று ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு என்றென்றும் துணை நிற்கும். நாட்டிற்காகவும் ராணுவத்திற்காகவும் தமிழ்நாடு என்று உறுதியுடன் துணை நிற்கும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதேபோன்று இந்திய ராணுவத்தை நடவடிக்கைக்கு ராகுல் காந்தியும் வரவேற்பு கொடுத்ததோடு ஜெய்ஹிந்த் என்ற தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.