
ஆப்கானில் தலிப்பான்களின் ஆட்சி தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு பல்வேறு தடை உத்தரவு போடப்பட்டது. மேலும் பொழுதுபோக்கு, சினிமா, பொது இடங்களில் இசை இசைப்பது போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்கக்கேடானதாக கருதி பறிமுதல் செய்யப்பட்ட இசை வாத்தியங்களை தலிபான் அதிகாரிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.
இதுகுறித்து நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு துறை தலைவர் அஜித் அல் ரஹ்மான் அல் முகாஜீர் கூறிய போது இசையை ஊக்குவிப்பது தார்மீக ஊழலை ஏற்படுத்தும் மற்றும் இசை இளைஞர்களை வழிதவற செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். எரிக்கப்பட்ட இசைக்கருவிகளின் மதிப்பு 100 டாலர் இருக்கும் என கூறப்படுகிறது.