உத்தரப்பிரதேசம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த சிவம் உஜ்வால் என்ற அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர், கடந்த ஆண்டு ஷானவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு, தனது மனைவியும் சினிமா நடிகை நோரா பதேகி போல் கட்டுடல் உடையவராக இருக்க வேண்டும் என வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. தினமும் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்ய கட்டாயப்படுத்தி, தவறினால் உணவின்றி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிதாகத் திருமணமான ஷானவி, கணவனின் கட்டாயத்தால் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். ஆனால் ஒரு நாள் உடல் நலக்குறைவால் அவ்வாறு செய்ய தவறியபோது, சாப்பாடு தராமலே பட்டினியில் வைக்கப்பட்டதோடு, கையில் கிடைத்த பொருட்களால் அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். அதையும் தாண்டி, ஆபாச வீடியோக்கள் பார்ப்பது, அவற்றைப் போலவே உறவுறைய வேண்டும் என்ற வற்புறுத்தலால் ஷானவிக்கு கரு கலைந்தது. இது அவரை உளவியல் ரீதியாகவே கடுமையாக பாதித்தது.
மேலும், இவரது மாமியாரும் மேலோட்டமாக நடத்தாமல், தினமும் நகை, பணம் கொண்டு வரச் சொல்லி, வரதட்சணை குறித்தும், உடல் மற்றும் மன அழுத்தத்திற்கும் பாகுபாடாக நடந்துகொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஷானவி, தாயாரின் வீட்டுக்கே சென்று தங்கினார். பெற்றோரால் மீண்டும் சமாதானப்படுத்தப்பட்டு கணவனின் வீட்டிற்கு திரும்ப முயன்றபோது, அவர் அங்கு ஏற்கப்படாமல், பணம் கொண்டு வருமாறு கூறி வீட்டில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்.
இது எல்லாம் பொறுக்க முடியாத அளவுக்கு சென்றதும், ஷானவி நேரடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை படுக்கையில், வாழ்க்கையிலும் தினமும் கொடுமைப்படுத்திய கணவரின் செயல்கள் குறித்து நன்கு விளக்கமாக தெரிவித்துள்ளார். ரூ.24 லட்சத்தில் கார், மேலும் ரூ.10 லட்சம் ரொக்கம் கொடுத்தும், தொடரும் இந்த துன்பங்கள் குறித்து போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
