
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது.
நேற்று நள்ளிரவு 3 முக்கிய பயங்கரவாத அமைப்புகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கைகளை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு வரவேற்பு அளித்தார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை வரவேற்கும் விதமாக சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…
#OperationSindoor
This is the face of the Indian Army
Jai Hind 🇮🇳🫡— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 7, 2025