இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆன்லைன் மோசடி குறித்து புகார் அளிக்க Cybercrime என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Report suspect என்ற பகுதியை கிளிக் செய்து suspect data மெனுவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் புகார் அளிக்க விரும்பும் மோசடி இணையதள முகவரி, வாட்ஸ் அப் எண், தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரியை பதிவிட்டு அது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து மோசடி குறித்து 500 வார்த்தைகளுக்குள் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.