இந்தியாவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் ஓய்வூதிய தொகை குறித்த விவரங்கள் மற்றும் மொத்த இருப்பு தொகை ஆகிய அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள பயனர்கள் UAN நண்பருடன் இணைக்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் யூசர் நேம் ஆகிய விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதனை மறந்து விடும் போது நம்முடைய கணக்கின் விவரங்களை அறிந்து கொள்வது சிரமமாகிவிடும். UAN பாஸ்வேர்டை மறந்து விட்டால் அதனை எவ்வாறு மீண்டும் பெற முடியும் என்பதற்கான வழிகளை இதில் பார்க்கலாம்.

  • அதற்கு முதலில் UAN சேவைகளுக்கு EPFO UAN மெம்பர் அதிகார இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் ‘Forgot Password’ என்பதை தேர்வு செய்து யுஏஎன் மற்றும் கேப்ட்சா கோடை பதிவிட வேண்டும்.
  • அதன் பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.
  • ஓடிபி உள்ளிட்டு உறுதிப்படுத்திய பிறகு பாஸ்வேர்டை மாற்றி அமைப்பதற்கான அனுமதி அளிக்கப்படும்.
  • இப்போது உங்கள் பழைய பாஸ்வேர்டை மறந்துவிடும் பட்சத்தில் புதிய பாஸ்வேர்டை என்டர் செய்து உங்கள் அக்கவுண்டை  பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.