2024-25 ஆம் கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடங்க உள்ள நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ராகிங் தடுப்பு குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ராகிங் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே குழுவால் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வழிமுறைகளை அனைத்து கல்லூரிகளும் விடுதிகளிலும் பின்பற்ற வேண்டும். ராகிங் தடுப்புக் குழுக்கள் அமைப்பது மற்றும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது போன்ற ஏற்பாடுகளையும் அனைத்து கல்லூரிகளும் மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் ராகிங் தொடர்பான எதிர்வினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் எனவும் இது தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் உதவி எண்களை கல்லூரிகளாகங்களில் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள.