இந்தியாவில் உள்ள போன் நம்பர்களுக்கு சர்வதேச அழைப்புகளை செய்ய +91 என்ற எண்ணை இணைத்து டயல் செய்ய வேண்டும். அது எப்படி வந்தது என்று யாருக்காவது தெரியுமா? இந்த குறியீடுகள் ஐக்கிய நாடுகள் சபையால் உலக நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு பகுதிகள் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்பதாவது மண்டலத்தில் ஆசியா மற்றும் வளைகுடா நாடுகள் அடங்கும். இந்த வரிசையில் இந்தியா +91, பாகிஸ்தான் (+92) மற்றும் ஆப்கானிஸ்தான் (+93) ஆகிய நாடுகளுக்கு குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.