மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. பிரபல தொழில் அதிபரான இவர் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு அழகான கிராமத்துக்கு சென்றுள்ளார். அந்த கிராமம் குறித்து தன்னுடைய எக்ஸ் தள பதிவில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவு சோஷியல் மீடியாவில் மிகவும் பரவலாக வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, அந்த அழகான கிராமம் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகருக்கு அருகில் அமைந்துள்ள கடமக்குடி. இந்த கிராமம் பூமியின் மிக அழகான கிராமங்களில் ஒன்றாக பட்டியலிடப்படுகிறது.

இந்த கிராமத்தை பார்வையிடுவதற்கு எப்போதும் தான் விரும்புவதாகவும், இது தன்னுடைய பயண பட்டியலில் எப்போதுமே இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் இந்த ஆண்டு டிசம்பரில் தான் கொச்சிக்கு ஒரு வணிக பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்த கிராமம் நகரத்திலிருந்து அரை மணி நேர தூரத்தில் தான் உள்ளது.

எனவே இந்த முறை அந்த கிராமத்திற்கு நிச்சயமாக செல்வேன் என தன்னுடைய பதிவில் தெரிவித்து இருந்தார். இவரின் இந்த பதிவு செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இந்த கிராமம் கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சி நகரில் அமைந்துள்ள சிறிய தீவு. இங்கு கால்வாய்கள், பசுமையான நெல் வயல்கள், மீன் வளர்ப்பு என பார்ப்போரை மிகவும் ஈர்க்கும் வண்ணத்தில் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் உள்ள கிராமப்புற சூழல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மஹிந்திராவின் இந்த பதிவு சமீபத்தில் பிரபலமான கூமாபட்டி கிராமத்தை பற்றி எடுத்துரைக்கும் இணையவாசியின் பதிவு போன்று இருப்பதாக பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.