
மும்பையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் அம்பானி-நீடா தம்பதியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டுக்கு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமண விழா நாளை வரை நடைபெறும் நிலையில் ஏராளமான பிரபலங்கள் மும்பையில் குவிந்துள்ளனர். அவர்களை ஆடம்பர ஹோட்டல்களில் தங்க வைத்து மிகவும் வசதியாக அம்பானி கவனித்துக் கொள்கிறார்.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் அம்பானி பரிசுத்தொகுப்பு வழங்கியுள்ளார். அதில் ஒரு வெள்ளி நாணயத்துடன் இனிப்பு வகைகள் அடங்கியுள்ளது. அதோடு நாங்கள் எங்களுடைய ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை கடவுளின் ஆசிர்வாதத்தால் கொண்டாடி வருகிறோம். இப்படிக்கு நல்வாழ்த்துக்கள் உடன் ஆனந்த் அம்பானி மற்றும் நீடா அம்பானி என்ற ஒரு வாசகமும் இருக்கிறது. மேலும் இந்த பரிசுத்தொகுப்பு தொடர்பான வீடியோவை ஊழியர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.