அமெரிக்காவில் உள்ள ஒரு கடையில் தற்போது பேஷன் என்ற பெயரில் அரிசி மூட்டையை கோட்டாக விற்பனை செய்வது நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த கோட்டை பார்த்த பிறகு பிரபல டிக் டாக்டர் சச்சி ராஜ் குரு தன்னுடைய ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார். அதாவது பொதுவாக நம்மூரில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசி மூட்டையை அவர்கள் கோட் போன்று மாற்றி அதனை விற்பனை செய்கின்றனர்.

ராயல் பாஸ்மதி அரிசி பையை பயன்படுத்தி இந்த கோட்டை உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு கோட்டின் விலை இந்திய மதிப்பில் 1.6 லட்சம் ரூபாய் ஆகும். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

மேலும் நம்மூரில் விற்கப்படும் அரிசி மூட்டையை அவர்கள் பேஷன் என்ற லட்ச ரூபாய்க்கு கோட்டாக விற்பனை செய்வது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என்ற அளவிற்கு மாறியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sipping Thoughts (@sipping.thoughts)