அவதூறுகளை நம்பி களமிறங்கி இருக்கும் ஆதிக்கவாதிகளை வீட்டுக்கு அனுப்பும் நாள் தொலைவில் இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் உதயநிதி, இந்தியாவில் 9 ஆண்டுகால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாசிஸ்ட்டுகள் பொய் செய்தியை கையில் எடுத்துள்ளார்கள்.

பாஜகவின் பொய் கூச்சல்களை புறந்தள்ளி கழகப் பணி மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி சமத்துவம் மற்றும் சமூக நீதி காப்பதற்கான நம் பயணத்தை தொடருவோம். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை தலைமை கழகத்தின் ஆலோசனையை பெற்று சட்டத்துறையின் உதவி பெற்று சட்டப்படி எதிர்கொள்வேன் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.