
தற்போது நிரந்தர வங்கி கணக்கு மற்றும் அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கிகளின் பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கு கட்டாயமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். பான் கார்டில் பெயர் மற்றும் முகவரி ஏதாவது எழுத்து பிழை இருந்தால் அல்லது முகவரியை மாற்றம் செய்ய நேர்ந்தால் கட்டாயமாக வீட்டு முகவரியை புதுப்பிக்க வேண்டும். ஆதார் கார்டு பயன்படுத்தி பான் கார்டில் உள்ள முகவரியை எப்படி புதுப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
அதற்கு முதலில் என்ற ஹோட்டலுக்குச் சென்று பான் கார்டில் மாற்றம் மற்றும் திருத்தம் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு பான் கார்டு விவரங்களில் மாற்றம் மற்றும் திருத்தம் செய்ய விண்ணப்பத்தினை கிளிக் செய்து பான் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும். பிறகு ஆதார் எண்,மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற அனைத்து விவரங்களையும் பதிவு செய்து submit கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வந்தவுடன் அதனை உள்ளிட்டு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை பயன்படுத்தி பான் கார்டில் முகவரியை புதுப்பித்துக் கொள்ளலாம்.