இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஆதார் கார்டு வைத்து அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். இதனால் மத்திய அரசு முக்கிய ஆவணங்கள் அனைத்திலும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

குறைந்தது பத்து வருடங்களுக்கு ஒரு முறையாவது ஆதார் கார்டில் உள்ள புகைப்படம், முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை அப்டேட் செய்ய வேண்டும். இந்த நிலையில் மார்ச் 14ஆம் தேதி வரை myaadhaar போர்டல் மூலமாக இலவசமாக ஆதார் விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம். அதன் பிறகு நீங்கள் பெரும் சேவைக்கு தகுந்தது போல கட்டணம் வசூல் செய்யப்படும்.