நாட்டில் ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அவர்கள் கட்டாயமாக அதனை புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசமும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ஆதார் அட்டையில் கைரேகையை புதுப்பிக்காவிட்டால் அவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காது என்று ஒரு செய்தி பரவி வருகிறது. இது தொடர்பாக தற்போது தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. ‌

அதாவது ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மற்றும் கண் கருவிழி ஸ்கேன் போன்றவைகள் தோல்வி அடையும்போது அவர்களுக்கு கையெழுத்து வாங்கி பொருட்கள் வழங்கும் மாற்று நடைமுறை அமலில் இருக்கிறது. அதன் பிறகு கைரேகை சரிபார்க்காத காரணத்தினால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க மறுக்கப்படுவது கிடையாது. மேலும் ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனவே ஆதார் அட்டையை புதுப்பித்தால்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கும் என்று வெளிவரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்று அரசு விளக்கம் கொடுத்துள்ளது.