ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எண்ணைப் பெற்றவர்கள் மற்றும் சமீபத்தில் தங்கள் பதிவுகளை புதுப்பிக்காதவர்கள் தங்கள் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே அது புதுப்பிக்கப்படாமல் இருந்தால் ஜூன் 14க்குள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால்  ஜூன் 14 கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை புதுப்பிக்க நாளை செப்டம்பர் 14 வரை நீட்டித்திருக்கிறது மத்திய அரசு. இன்னும் பலர் ஆதாரை புதுப்பிக்காமல் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஆதார் போர்ட்டலில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், இமெயில் உள்ளிட்டவைகளை இலவசமாக புதுப்பிக்கலாம். புகைப்படம், பயோமெட்ரிக் உள்ளிட்டவைகளை ஆதார் மையத்திற்கு சென்று ரூ.50 கட்டணமாக செலுத்தி புதுப்பிக்கலாம்.