சாமானியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று முதல் குறைத்துள்ளது. சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 17.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைத்து நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் உள்நாட்டு சந்தையில் எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.