சென்ற சில காலாண்டுகளில் அஞ்சல் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி அளிக்கப்படுவதால், அவற்றில் மக்கள் செய்யும் முதலீடு அதிகரித்திருக்கிறது. பாதுகாப்பான (அ) உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களின் புகழ் அதிகரித்திருக்கிறது. எனினும் இதனுடன் கருப்புப் பணக் குவிப்பு மற்றும் பண மதிப்பிழப்பு பற்றியும் அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் இந்த திட்டங்கள் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு வழிமுறையாக மாறக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு புது விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் 10 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் வருமானச் சான்றிதழைக் காட்டுவது அவசியம் என அஞ்சல் துறை அண்மையில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் 10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் சிறு சேமிப்பு திட்டத்தில் வருமான ஆதாரத்தை அளிக்கவேண்டும். இது தவிர்த்து தபால் அலுவலகத்திலுள்ள ஒவ்வொரு முதலீட்டையும் KYC/PMLA இணங்குதல் விதிமுறைகளின் வரம்பிற்குள், அரசாங்கம் கொண்டுவந்துள்ளது..