தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தாராளமாக குறைகளை கூறுங்கள், ஆதாரத்துடன் கூறினால் அடுத்த நிமிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினர் எல்லாம் தூக்கி அடிக்கப்படுகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்வைத்த நிலையில், யார் அப்படி தூக்கி அடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் கூடினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறினார்.

மேலும் ஆதாரத்தோடு சொல்லுங்கள் அதை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. குறைகளை சொன்னால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தான் மக்கள் தங்களை இங்கு உட்கார வைத்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாராளமாக குறை கூறுங்கள். ஆனால் ஆதாரத்துடன் சொல்லுங்கள். அதற்கு அடுத்த நிமிடமே நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.