இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பெரும்பாலான மாணவர்கள் தங்களது தாய், தந்தைகளை இழந்து சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு குழந்தைகள் தங்கள் பாதுகாவலர்களை இழந்து மனதளவில் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு ஆதரவு இன்றி தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் சென்ற 2021ம் வருடம் PMகேர்ஸ் எனும் திட்டமானது கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ஆதரவு இன்றி தவிக்கும் குழந்தைகளுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்விக்கான உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைக்கு 18 வயதாகும் போது மாதாந்திர உதவித் தொகை மற்றும் குழந்தையின் 23வது வயதில் ரூபாய்.10 லட்சம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இப்போது திட்டத்தின் கீழ் 4,345 குழந்தைகள் பயனடைந்து இருப்பதாக மத்திய குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் தெரிவித்து உள்ளார். நிவாரண திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு பற்றி பேசிய அவர் பிஎம் கேர்ஸ் திட்டத்தில் ரூபாய்.341.87 கோடி ரூபாய் குழந்தைகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.