நீண்ட தூரம் பயணத்திற்கு பெரும்பாலும் ரயில் பயணத்தை தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். இதற்கு காரணம் ரயிலில் டிக்கெட் விலை குறைவு வேகமாகவும் சவுகரியமாகவும் பயணம் செய்யலாம். ரயிலில் புகைப்பிடிப்பது தீங்கு விளைவிக்கும் செயல் என்பது நம்மளுக்கு தெரியும். ஆனால் ரயிலில் புகை பிடித்தால் என்ன நடக்கும் என்பது யோசித்திருக்கிறீர்களா? ஒருவேளை இல்லை என்றால் புகை பிடிப்பது குறித்து இந்திய ரயில்வே சில விதிமுறைகள் வகுத்துள்ளது அது குறித்து பார்க்கலாம்.

ரயிலில் புகை பிடிப்பது ரயில்வே சட்டத்தின் 167-வது பிரிவின் கீழ் குற்றமாகும். இதில் ரயில் பயணத்தின் போது யாராவது சிகரெட் பிடித்தால்  அவருக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். ரயிலில் தீக்குச்சிகளை கொளுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ரயிலில் தீ விபத்து போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. 2500க்கும் மேற்பட்ட பெட்டிகளில் இது போன்ற அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளதால் ரயிலில் யாராவது தீ வைத்தால் அது தெரிந்து விடும். சில பயணிகள் ரயில் கழிப்பறைகளில் சிகரெட் பிடிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ரயிலில் எங்குமே புகைபிடிக்க முடியாது .கழிப்பறையில் புகை பிடித்தாலும் அது குற்றமாகும் அதற்கும் தண்டனை கிடைக்கும்..