ஆண்ட்ராய்டு சாதனங்களில் தேவையற்ற ட்ராக்கர் கண்டறிதல் அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. ப்ளூடூத் அடிப்படையில் ஆன எந்த ஒரு ட்ராக்கரும் உங்களை கண்காணிக்க தொடங்கியவுடன் இது உங்களை எச்சரிக்க கூடிய அம்சமாகும். இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்ட அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

கூகுளின் தேவையற்ற டிரக்கர் கண்டறிதல் அம்சத்தை பயன்படுத்தி எந்த ப்ளூடூத் அடிப்படையில் கண்காணிக்க தொடங்கியதும் உங்களின் சாதனத்தில் பாப் அப் நோட்டிபிகேஷன் தோற்றுவிக்கப்படும். மேலும் உங்களுடன் ட்ராக்கர் பயணித்த இடத்தின் வரைபடத்தையும் நீங்கள் காண முடியும். பின்னர் டிராக்கரை எளிதாக கண்டுபிடிப்பதற்கு பிளே சவுண்டு விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆண்ட்ராய்டு 6.0 அல்லது அதற்குப் பிறகு இயங்கும் ஸ்மார்ட் ஃபோன்களில் இந்த அம்சம் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது