ஒரு நாளைக்கு இரண்டே நாட்கள் மட்டும் வேலை செய்து, ஒரு கோடி ரூபாய் ஊதியம் பெறுவது என்பது பலருக்குக் கற்பனை செய்ய முடியாத ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் உள்ள சௌத் டகோட்டா பகுதியில் உள்ள ஒரு தொலைக்காட்சி கோபுரத்தின் விளக்குகளை மாற்றும் பணியைச் செய்யும் தொழிலாளி ஒருவர், இந்த அசாத்தியமான ஊதியத்தைப் பெறுகிறார்.
மேலும் சுமார் 1500 அடி உயரமுள்ள அந்த பிரம்மாண்ட கோபுரத்தின் உச்சியில் ஏறி, அங்குள்ள பழுதடைந்த விளக்குகளை அகற்றிவிட்டுப் புதிய விளக்குகளைப் பொருத்துவதே இவரது முக்கியப் பணியாகும். உயிர் பணயம் வைத்துச் செய்யப்படும் இந்த வேலைக்குத் தேவைப்படும் அபரிமிதமான துணிச்சலும், நுட்பமான திறமையும்தான் இவ்வளவு பெரிய ஊதியத்திற்குக் காரணமாக அமைகிறது.
இந்த வேலை பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், இதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் ஏராளம். தரையிலிருந்து பல நூறு அடி உயரத்தில், பலத்த காற்று மற்றும் மோசமான வானிலைக்கு மத்தியில், வெறும் பாதுகாப்பு கயிறுகளை மட்டுமே நம்பி இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வளவு உயரத்தில் ஏறுவதற்கு அசாத்தியமான உடல் வலிமையும், மன உறுதியும் அவசியம் என்பதால், மிகச் சிலரே இந்தப் பணியைச் செய்ய முன்வருகின்றனர். சாதாரண மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத சவால்கள் நிறைந்த இந்தப் பணி, “அபாயகரமான வேலைகளுக்கு எப்போதும் அதிக மதிப்பு உண்டு” என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.
