மனிதர்களாகிய நாம் நம்முடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்திற்காக செலவிடுகிறோம். ஆரோக்கியமாக வாழும் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும். இப்படி ஒரு நிலையில் தூக்கத்திற்கு ஏற்ற சூழல் இருந்தால் தான் நிம்மதியாக தூங்க விட முடியும். ஆனால் பல ஆய்வுகள் ஆண்களை விட பெண்களுக்கு 20 நிமிடம் தூக்கம் தேவை என்று தெரிய வந்துள்ளது.

பெண்கள் தங்கள் உடல் நலத்தைப் பற்றி கவலைப்படாமல் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்வதாகவும், அதற்கு அவர்கள் மூளையை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.