கேரளாவில் உள்ள காஞ்சங்கோடு பகுதியில் மருத்துவர்கள் மேற்கொண்ட ஒரு அறுவை சிகிச்சை பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது 46 வயது மதிக்கத்தக்க நபரின் ஆணுறுப்பில் ஒரு இரும்பு வாசர் ஒன்று சிக்கிக் கொண்டது. இதற்காக அவருக்கு ஆப்ரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்த நிலையில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுமார் இரவு 10 மணியளவில் மருத்துவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு வந்தனர். அதன் பிறகு நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரிங் கட்டரை பயன்படுத்தி அந்த வாசரை தீயணைப்பு துறையினர் வெட்டி எடுத்தனர்.

இதில் நோயாளிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் இரும்பு வாசர் பிறப்புறுப்பை சுற்றி இருந்தது. இதனால் அவர் சிறுநீர் கூட கழிக்க முடியாமல் அவர் மிகவும் அவதிப்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் அதனை வெற்றிகரமாக வெட்டி எடுத்தனர். இதனை செய்யும் போது மிகவும் பயமாக இருந்ததாக அவர்கள் கூறினர். இருப்பினும் வெற்றிகரமாக அதனை வெட்டி எடுத்தனர். அவரிடம் பிறப்புறுப்பில் எப்படி அது சிக்கியது என்று கேட்டதற்கு தான் மது போதையில் இருக்கும்போது யாரோ வந்து அதனை மாட்டி விட்டு சென்றதாக கூறினார். மேலும் அவர் தற்போது  நலமுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.