ரயிலின் ஜன்னலில் சிக்கிய தேங்காயை மீட்டெடுக்க ஒருவர் மேற்கொண்ட அதிரடி முயற்சி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் செயலை நெட்டிசன்கள், நடிகர் அஜய் தேவ்கனின் அதிரடிச் செயல்களுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
அதாவது ரயிலில் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவரின் இளநீர் எதிர்பாராதவிதமாக ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது. அதை எடுக்க அவர் எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை. இதைப் பார்த்த அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, அந்த இளைஞரின் முயற்சியைக் கண்டு ஏளனமாகச் சிரித்துள்ளார். இது அந்த இளைஞரின் ‘ஆண் அகங்காரத்தை’ (Male Ego) சீண்டிப் பார்க்கவே, அவர் அந்த இளநீரை மீட்டே தீருவது என முடிவெடுத்தார்.
अंत में भाई ने पूरे कपल समाज की लाज रख दी।🔥😂 pic.twitter.com/26lckBnZUN
— Jitu Rajoriya (@jitu_rajoriya) March 10, 2026
தனது கழுத்தில் இருந்த சால்வை மற்றும் தலையில் இருந்த தொப்பியைத் தூக்கி எறிந்தவர், முழு பலத்தையும் திரட்டி மீண்டும் இழுத்தார். சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, ஜன்னலில் சிக்கியிருந்த இளநீரை வெற்றிகரமாக உள்ளே இழுத்து எடுத்தார். பின்னர், அந்தப் பெண்ணிடம் வெற்றிக் களிப்புடன் அதை காட்டி, அவருக்கு இளநீரை குடிக்கக் கொடுத்தார்.
இந்த நகைச்சுவையான வீடியோவை ‘எக்ஸ்’ (X) தளத்தில் @jitu_rajoriya என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இதைப் பார்த்துள்ளனர். 3,400-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், “அஜய் தேவ்கனை விட இந்த அண்ணன் அதிரடியாகச் செய்துவிட்டார்”, “சர்தார் படம் நினைவுக்கு வருகிறது” என கமெண்டுகளில் கலாய்த்து வருகின்றனர்.
