
பெங்களூரில் ஒரு மாணவர் ரேபிடோ ஆப்பின் மூலம் கல்லூரியிலிருந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோ புக் செய்த சம்பவம் தற்போது ரெட்டிட் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தெரிவித்தபடி, ஆப்பில் காட்டிய எண்ணுடன் பொருந்தாத ஆட்டோ வந்தது. ஆனால் நீண்ட நேரம் காத்திருந்ததால் மாணவர் அந்த ஆட்டோவில் ஏறினார். பயணம் நேர்த்தியாக நடந்தாலும், இறங்கும் இடத்தில் ஒரு புதிய பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியுள்ளது.
இறங்கிய பிறகு ஆட்டோ ஓட்டுநர் 256 ரூபாய்க்கு பதிலாக 338 ரூபாய் பணம் செலுத்துமாறு கூறினார். இதனால் சந்தேகமடைந்த மாணவர் ரேபிடோ ஆப்பை காட்டுமாறு கேட்டார். அதற்கு ஓட்டுனர் கோபமாகி கன்னடம் தெரியாததற்கு மாணவரை திட்டியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மாணவர் ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தார். அப்போது ஓட்டுனர் உடனே பயணத்தை முடிக்காமல் அரை மணி நேரத்திற்கு பிறகு பயணத்தை 2.4 கிலோ மீட்டர் தள்ளி முடித்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மாணவர் புகார் அளிக்கவில்லை. ஏனென்றால் ஓட்டுநருக்கு அவரது இருப்பிடம் தெரிந்து விட்டது. இதனால் பிரச்சனை வரக்கூடும் என புகார் அளிக்காமல் இருந்துள்ளார். அந்த மாணவருக்கு ஆதரவாக ரெட்டிட் தளத்தில் பேசி வருகின்றனர். அதில் ஒரு பயணம் வீட்டிற்கு அருகில் இறங்காதீர்கள். அருகில் உள்ள கடை அல்லது பொது இடத்தில் இறங்குங்கள் . என கூறியுள்ளார். மேலும் சிலர் ஆப்பில் புகார் அளித்து பணத்தை திரும்ப பெற முயற்சிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.