ஓலா மற்றும் ஊபர் செயலிகளை பயன்படுத்துவதற்கு அதிக சேவை கட்டணம் வசூலிப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். ஆட்டோக்களுக்கு புதிய செயலியை உருவாக்கும் முயற்சியில் அரசு தற்போது இறங்கியுள்ளது. இதற்காக ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர், போக்குவரத்து துறை, செயலி வடிவமைப்பு குழுவுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இந்த செயலி  பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.