திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் நகையை திருடிய தற்காலிக அர்ச்சகர் தமிழ்நாடு அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பதை முற்றிலும் பொய்யானதாகும் என தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. இது குறித்தான அறிக்கையில், இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகர் ஆக பணியாற்றி வந்த சண்முகம் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 57 கிராம் தங்கச் செயினுடன் கூடிய திருமாங்கல்யத்தை திருடி அடகு வைத்துள்ளார்.

திருமாங்கல்யம் மீட்கப்பட்டு மீண்டும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்புவது குற்றச்செயலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.